அன்பு
கடல் அலை
கடல் அலைகளை கால்களில் வாங்கிய வேளைகளிலும்,
ஓடும் ரயிலில் வாங்கிய ஈரக் காற்றிலும்,
உன் ஞாபகத்தை அசை போடாமல் இருந்ததில்லை…!
நடை பாதை
நானாகத் திரிந்த குறிக்கோளற்ற நடை பாதைகளில்…
நல்லவளே உன்னை பற்றி எண்ணி நடந்ததே அதிகம்….!
கவிதையும், காதலியும்
கவிதை போல காதலியும்…
காதலி போல கவிதையும்… மிகவும் அரிது…!
இரண்டுமே கிடைத்தது…! வாழ்க்கை போராட்டத்தில்
எஞ்சி இருப்பது என்னவோ கவிதை மட்டுமே…!
இழப்பு
இழப்புகளினால் இன்பமடைகிறேன் நான்,
என்னை உன்னிடம் இழப்பதினால்…!
நிலை இல்லாக் கண்ணாடி
நிலை இல்லாமல் ஆடுகின்ற கண்ணாடிகளை பார்க்கும் தருணங்களில்
என் முக ஓரத்தில் எஞ்சி இருக்கும் உன் முகத்தையும் அவ்வப்போது பார்க்க நேரிடும்…!
சருகு
சருகாய் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்…!
உன் பாதங்களை தாங்க.., பயப்படாதே..!
எங்காவது, ஒரு பூ விழுந்து சருகு உடைந்து இருக்கிறதா?
Cell Phone
விடியல் அற்ற நீண்ட இரவுகளில்,
தூக்கமில்லா நேரங்களில்,
தலையணைக்கும், போர்வைக்குமான பயணத்தில்,
அடிக்கடி Cell Phone எடுத்து பார்ப்பதுண்டு,
அவ்வொளியில் பிரகாசித்து நீ புன்னகைப்பாய்.
இலக்கணம்
சில இடங்களில் நான் இலக்கண விதிகளை மீறுவதுண்டு….!
படர்க்கையில் உள்ள உன்னை,
முன்னிலைப் படுத்திப் பேசுவதும் உண்டு…!
நொடிக்கு இரு முறை
நான் நொடிக்கு இரு முறை
உன்னை திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்கிறேன்…!
நீ திரும்பவே இல்லை,
கடைசியாய், நீ வளைந்து செல்வதற்கு முன்னதாய்,
திரும்பி என்னைப் பார்த்து சிரிக்கிறாய்.
மனம் என்றும் உணர்ந்திடாத
ஒரு நிம்மதியை அடைந்து இருந்தது…!
| Previous Page | Next Page |
M.lukman
June 20, 2012 at 4:25 PM
Thalaiva Blogs a update panunga waiting for more