தாய்மை
தொலைதல்..!
நீ என்னை தேடுவதற்காகவே
தொலைந்து போக ஆசைப் படுகிறேன்…
நீ என்னை நினைக்க வேண்டும் என்பதற்காகவே…
விலகிப் போகவும் ஆசைப் படுகிறேன்… !
நண்பர்களின் திருமணம்
நெருங்கிய நண்பர்களின் திருமணத்திற்கு சென்று…
வீடு திரும்பும் நிசப்த நேரங்களில்…
உன் அருகாமையை தேடி… சோகமானதுண்டு…!
பிடித்த தருணங்கள்
நண்பர்களற்ற ஞாயிறுகளும், வெயிட்கால விடுமுறை நாட்களும்…
முடிவற்ற நடை பாதைகளும், தண்டவாளங்களில் சுழலும்
நீண்ட ரயில் பயணங்களும்… பிடித்த தருணங்கள்,
அவ்வமயங்களில் நீ மட்டுமே என்னைஆக்கிரமித்து இருப்பதால்….
மாலை சூரியன்
மாலை சூரியன் எனை தனிமையிலே சந்திக்க அஞ்சுதடி…!
காலை பனித்துளியும் உன்னை அழைத்து வரவேண்டும் என கெஞ்சுதடி…!
எண்ணமும், சிந்தனையும்…
எண்ணங்களையும் சிந்தனைகளையும் வீணாக்க விரும்ப வில்லை…!
அதனாலேயே உன்னை மட்டுமே நினைக்கிறேன் எப்போதும்….!
தோற்றவன்…
உனது அழகின் ஆழத்தை அளக்க முடியாமல்
தோற்றவன்….
உனது அன்பின் நீளத்தையும் அளக்க முடியாமல் தோற்கிறேன் மறுபடியும்….!
| Previous Page | Next Page |
Priyadharshni
April 11, 2011 at 9:22 AM
Shafeequr, Super Ponga…. Kalakeetenga….
All your Poems posted here are very excellent…. Really stayed at heart…
Note :: I sent your blog id to all my frnds to visit.. :-).
Awaiting your more poems…..
Priyadharshni 🙂
ebinezar
September 12, 2011 at 10:40 AM
Super Thala… Kalaugureenga
sabeer
September 19, 2011 at 2:56 PM
Hai Shafeequr, unnudai kavithai collection yallama super. mukkiyama
ennamum sinthanaiyum kavithai romba super.