காதலிக்கும் பருவம்
காதலிக்கும் பருவம்…!
இதோ என் எதிரில் அமர்ந்திருக்கிறாய்…! கோபமாக இருக்கிறாய். தவறு என் மீது தான். மன்னிப்பும் கேட்டுவிட்டேன். இன்னும் கோபமாய் இருக்கிறாய். முகமெல்லாம் கோபம், என்னை பார்க்கவே மாட்டேன்கிறாய். நான் உன்னையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். “இப்போ நான் என்ன தான் பண்ணனும்?”, நான் கேட்கிறேன் கெஞ்சலாக. நீ பதிலேதும் கூறாமல் வேறு பக்கமாய் பார்த்துக் கொண்டு இருக்கிறாய். நான் மறுபடியும் உன்னையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நீ என்னை சட்டை செய்வதாய் இல்லை. நான் மெதுவாக உன் hand bag இல் கை வைத்து அதை எடுக்க முயற்சிக்கிறேன். அதை வெடுக்கென்று வேகமாய் பிடுங்குகிராய்.
திடீரென எனக்கு ஒரு Phone Call வருகிறது, அதை எடுத்து நான் பேசத் துவங்குகிறேன், எழுந்து நடந்து கொண்டே பேச ஆரம்பிக்கிறேன். Phone இல் பேசிக் கொண்டிருக்கும் என்னை, நீ பார்ப்பதை, நான் உன்னைப் பார்க்காமலேயே உணர முடிந்தது. பின்னர் நான் Phone பேசிகொண்டே அவ்வப்போது உன்னைக் கவனிக்கிறேன். நீ கீழே கிடந்த பூவை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாய். நான் கிட்டத் தட்ட ஒரு 5 நிமிடம் பேசி Phone ஐ cut செய்து விட்டு வந்து உன் அருகில் அமர்ந்தேன். “பூவுக்குலாம் life ரொம்ப கம்மி இல்ல?” இது நான். “ஆமாம், அதை தான் நானும் யோசிச்சுட்டு இருந்தேன்” என்கிறாய். “பொய் சொல்லாத, நீ என்ன பத்தி தான யோசிச்சுட்டு இருந்த?, Phone பேசும் போது என்ன தான பாத்துட்டு இருந்த?”. “இல்லடா இது நமக்கு சரி வராது, நீ புரிஞ்சுக்க மாட்ற…! எங்க வீட்ல எல்லாம் OK னு சொல்லவே மாட்டாங்க. வேணாம் நாம friends ஆவே இருந்துடுவோம். Love பண்ண வேணாம், புரிஞ்சுக்கோ..!”
ஆமாம், நட்பு மேலும் பக்குவப் பட்டு காதலாகும் ஒரு அழகிய தருணத்தில், ஆயிரம் ஞாயிற்றுக் கிழமைகளில், ஒரு அற்புத ஞாயிற்றுக் கிழமையாக அந்த நாள் அமைந்தது. “இல்ல உன் கூட வாழனும், உன் கண்ணைப் பாத்துட்டே இருக்கணும், உன் சிரிப்ப கேட்டுட்டே இருக்கணும், உன் கூடவே இருக்கணும், உன்ன எவ்ளோ Love பண்றேன் தெரியுமா?, அதுலாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது. உன்னோட நினைப்பு தான் எப்பயுமே. இல்ல உனக்கு புடிக்கலைனா வேணாம், friend ஆவே இருக்கலாம், but friendship அ cut பண்ணிடாத. உன் கூட பேசாம என்னால இருக்க முடியாது”.
என் காதலை பொறுமையாய், எளிதாய் கூறி முடித்தேன். என்னை விட இவ்வளவு எளிதாய் யாரும் தன் காதலை கூறி இருக்க மாட்டார்கள். அவகாசம் கொடுத்ததற்கு உனக்குதான் நான் நன்றி கூற வேண்டும். “இல்லடா, எனக்கு கூட உன்ன புடிக்கும், அதுனால தான் இப்ப கூட பேசிட்டு இருக்கேன். அதுக்காக love பண்ணனும்னு இல்லைல, இதுலாம் வேணாம்டா. நாம இப்டியே இருக்கலாம். எனக்கு உன்னைப் பாத்தா அந்த நினைப்புலாம் இன்னும் வரலை. நீ ரொம்ப நல்லவன். இன்னும் எவ்வளவோ இருக்கு. இப்போ வேணாம்னு சொல்றேன். அவ்ளோதான். நேத்து night எனக்கு தூக்கமே வரலை, உன் மேல அவ்ளோ கோபம். இப்டியே நிறுத்திக்கலாம் அப்டிலாம் யோசிச்சேன். நீ இதுவரை கோபப்பட்டு நான் பாத்ததே இல்ல, உன் மேல கோபப்படவும் முடியல. எனக்கு என்ன பண்ணனும்னே புரியல. சொன்னா புரிஞ்சுக்கோ”. சொல்லி முடிக்கும் போது உன் கண்ணோரமாய் துளிகள் நிறைந்து இருந்தது. நீயும் இவ்வளவு சீரியஸ் ஆக பேசி நான் பார்த்ததில்லை. உன் கண்ணீரைப் பார்த்த மறு நொடி நான் ஆடிப் போய் விட்டேன். தவறு செய்கிறோமோ என்கிற எண்ணம் வலுத்தது.
ஒரு 5 நிமிடம் ஏதும் பேசாமல் இருந்தோம், பின்னர் காதலற்ற பேச்சுகள் ஆரம்பித்தன. கல்லூரி, உலக நடப்புகள், நண்பர்கள் என்று நமது உரையாடல்கள் எங்கெங்கோ சுற்றித் திரிந்தது. அனால், எனக்குள் ஏதோ ஒரு உள்ளுணர்வு மட்டும் இன்னும் காதலிலேயே நின்று கொண்டு நாம் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. மறுபடியும் காதலைப் பற்றி பேசுவதற்கு தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தது. ஏனோ தெரியவில்லை, உன் கண்ணீரைப் பார்த்ததில் இருந்து என்னால் மீண்டும் காதலைப் பற்றி பேச ஆரம்பிக்க முடியவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. என் காதலை முழுமையாக சொல்லவில்லையோ என்று இதயம் மேலும் வேகமாக துடிக்க ஆரம்பிக்கின்றது.
ஒரு இரண்டு மணி நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். என்னால், முழு மனதுடன் எதைப் பற்றியும் பேச முடியவில்லை. அதை நீயும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாய். கடைசியாய் “சரி வா… வீட்டுக்கு போலாம்.” என்று கூறினாய். பிரியும் நேரம் வந்ததும் என் உள்ளுணர்வு அதிர்வடைந்து “ஐயோ இன்றைய நாள் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. இதை விட்டால் வேறு நல்ல நேரம் கிடைக்காது, எப்டியாவது சொல்” என்று அலாரம் அடித்தது. இருந்தாலும் எப்படி சொல்வது, எங்கே மறுபடியும் ஆரம்பிப்பது என்று இன்னும் தெரியவில்லை. வாய் திறக்கவே முடியவில்லை, மிகவும் கஷ்டப் பட்டு “இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமா?” என்று கேட்கிறேன். என் கண்கள் கலங்கி கண்ணீரின் வழியாக ஆடும் பிம்பமாய் தெரிகிறாய். நீ ஆச்சர்யமாய் என்னைப் பார்க்கிறாய்.
“ஏன்டா இப்டி பண்ற? நீ அழுதா என்னாலயும் தாங்க முடியாதுடா” உன் கைக்குட்டை எடுத்து தருகிறாய். “வா போலாம், லேட் ஆகுது, வீட்ல தேடுவாங்க…” எனக்கு மேலும் உன்னை கஷ்டப் படுத்த விரும்பவில்லை, பதிலேதும் கூறாமல் உன்னை தொடருகிறேன். என்ன யோசித்தாய் என தெரியவில்லை, திடீரென திரும்பி “ஒன்னும் கவலைப் படாதே, நாம பேசி முடிவெடுக்கலாம்” என்று கூறி கண்ணடிக்கிறாய். “இப்போ சிரி…!” என்றும் கூறுகிறாய் சிரித்துக் கொண்டே. எனக்கு புரிந்து விட்டது நீயும் என்னை காதலிக்க ஆரம்பித்து விடுவாய் என. நானும் கலங்கிய கண்களுடன் சிரிக்கிறேன். நீ என் கை பிடித்து நடக்க ஆரம்பிக்கிறாய். இவ்வளவு நாள் உன் கை பிடித்து நடந்தில் அதிகமாய் நன் ஏதும் உணர்ந்ததில்லை, ஆனால் தற்போது உன் கைப் பிடியில் ஒரு அழுத்தம் தெரிகிறது, ஒரு வித கூச்ச உணர்வு ஏற்படுகிறது. கையை விடுவித்து “I LOVE YOU” என்று கூறுகிறேன். “சீ… போடா…!” என்கிறாய் சிரித்துக் கொண்டே.
KarthiK Ram
July 5, 2012 at 12:44 PM
Shafeeq – Nice creativity thought. But no one would believe, “if u say u have never came across such a Red Rose flower garden “. Hatsoff to u & ur creativity. When I read this, I’m remembering few scene of VTV film, whether Gautam is ur junior ?
Amuthan
July 5, 2012 at 12:59 PM
thala.. really awesome..!!! kalakiteenga!!!
Jagan Ravanan (Rj)
July 5, 2012 at 1:13 PM
புதுமை எதுவும் இல்லை. ஆனாலும் ரசிக்கத்தான் செய்தேன். என்னவலின் நினைவும் வந்தது… ஏன் தல!!! இப்படி அழை வைக்கிறீற்கள்
N.K. Balaji
July 5, 2012 at 1:48 PM
very nice and touching love story….Rombha nalla irundhudhu. Aazhamaa yosichi ezhuthi irukeenga, vaazhthukkal..!
KarthiK Ram
July 6, 2012 at 3:07 PM
Boss how many version u have ?. I beleive this is Version 3.0
Ratheesh C Nair
July 11, 2012 at 9:55 AM
Nice one bro!! like like
Balaji. S
July 17, 2012 at 3:34 PM
Great shafeeq.
Anas
July 19, 2012 at 12:21 PM
Excellent!!!!
MBJohn
August 12, 2012 at 10:05 AM
kalakkal
Mohamed Irshath
July 22, 2016 at 3:32 PM
Machan super I not only like it but also love ❤ it