RSS

என்னடா வாழ்க்கை இது?

என்னடா வாழ்க்கை இது…?

அட என்ன இவனும் சிம்பு மாதிரி டயலாக் பேச ஆரம்பித்து விட்டானே என எண்ண வேண்டாம்…! பல நாள் மனதில் அரித்துக் கொண்டிருந்த விஷயம்…! எனக்கு இன்னும் வாழ்கைக்கு உண்டான சரியான அர்த்தம் புரியவில்லை…! ஒரு வேளை நான் முட்டாளாக கூட இருக்கலாம்…! இவனுக்கு வாழ்க்கை என்னவென்றே தெரியவில்லையே என்று கூட நீங்கள் நினைக்கலாம். இந்த கட்டுரையை படித்த பின்னர் நீங்களும் கொஞ்சம் இதைப் பற்றி யோசித்தால் நான் என் முயற்சியில் கொஞ்சம் வெற்றி பெற்றுள்ளேன் என்று என்னால் அர்த்தம் கொள்ள முடியும்…! என்னடா எடுத்தவுடனே ரொம்ப
Over hype ஆ இருக்கே என்று நினைத்தீர்களானால் மேலும் கொஞ்சம் படியுங்கள்…! (கண்டிப்பாய் மிகப் பெரிய கட்டுரை… So better do it at your free times)

உண்மையாகவே வாழ்க்கையின் ரகசியம் அறிய பல நாள் முனைந்ததுண்டு, இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. பலரது வாழ்கையை படித்தால் ஒருவேளை கண்டுபிடிக்க முடியுமோ என்று நினைத்து பலரை சந்தித்து அவர்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை அறிய ஆசைப் பட்டதுண்டு.


பிறக்கிறார்கள், படிக்கிறார்கள், படிப்பு வந்தால் தொடர்கிறார்கள் இல்லையெனில் ஒரு கடையைப் பார்த்து வேலைக்கு செல்கிறார்கள், இல்லை தொழில் கற்கிறார்கள். படித்தவர்களோ படிக்கும் வரை படித்து விட்டு வேலை தேடுகிறார்கள். படிக்காதவர்களுக்கு கூட வேலை எளிதாய் கிடைத்து விடும் போல. படித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பெதன்பது மிகவும் அரிது…


வேலை கிடைத்ததும், கிடைத்ததை வாங்குகிறார்கள், சில நாட்கள் சென்றதும் இவ்வுலகின் தலையாய கடமையான திருமணத்தை முடிக்கிறார்கள். பின்னர் ஒருவருடம் ஆனதுடன் குழந்தை,
Johnson and Johnson, அமுல் டப்பா, ஆவின் பால், மளிகை பாக்கி, வாடகை, Current Bill, Cell Phone recharge, புதிய துணிமணி, நகை, Uniform, School fees, Tuition fees, Insurance, Loan, மருத்துவ மனை செலவு, கடன், அடகு, முடிந்தால் சொந்த கார், சொந்த வீடு, Birthday, தீபாவளி, பண்டிகை, நோன்பு, கிறிஸ்துமஸ் இப்படியே ஒரு 20 வருடம் போராடுகிறார்கள். பிறது குழந்தைகளுக்கு திருமணம், பின்னர் ஒய்வு, மரணம்…!

இவை அனைத்தையும் ஒரே வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் அது தான் வாழ்க்கை…? இது தான் வாழ்க்கையா? இதில் என்ன சந்தோஷத்தை மனிதன் காண்கிறான்? இந்த வாழ்கையை வாழத்தான் உலகத்தில் இவ்வளவு மனிதப் பிறவிகளா? இதில் எதாவது செய்ய வேண்டும்… இந்த வாழ்க்கை செம போர், என்று இரவு கண்ணை மூடினால், அடுத்த நாள் காலை உடனே விடிகிறது…!


உடனே மறுபடியும் இயந்திர வாழ்க்கை. மீண்டும் யோசிக்க நேரம் இல்லாமல் செல்கிறது அடுத்த நாள். இரவு மீண்டும் இதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்ததும் தூக்கம். மீண்டும் காலை, மீண்டும் முந்தைய நாளின்
color xerox இன்றும். வாழ்கையில் ஒரு பிடிப்பு இல்லை… எதற்காக வாழ்கிறோம் என்றே தெரியவில்லை. இதை யோசிக்கவும் கூட நேரம் இல்லை…! அவனவன் அவனது வேலையை பார்பதற்கே நேரம் போதவில்லை. எத்தனை இயந்திரங்கள், வாகனங்கள், சாலைகள், கடைகள், கணினிகள், செல் போன்கள், கலாச்சாரங்கள், ஊர்கள், நாடுகள், மொழிகள், இன்னும் எத்தனை எத்தனை?

ஏன் மனிதன் இத்தனை இயந்திரங்களை கண்டுபிடித்தான். மனித வாழ்கையை எளிதாக்கவா? பல மனிதர்கள், தங்கள் வாழ்க்கையில் மனிதகளுடன் செலவழிக்கும் நேரத்தை விட இயந்திரங்களுடன் செலவழிக்கும் நேரம் தான் அதிகம். மனிதன் ஏன் தனக்கு தானே வேலைகளைக் கண்டுபிடித்தான்? குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவா? பல மனிதர்கள், தங்கள் வாழ்க்கையில் குடும்பத்துடன் செலவழிக்கும் நேரத்தை விட வேலைகளுடன் செலவழிக்கும் நேரம் தான் அதிகம். ஏன் மனிதர்கள் இவ்வளவு கஷ்டப் படுகிறார்கள்? பணத்திற்காகவா? ஏன் பணத்தின் மேல் இந்த மனிதர்களுக்கு இவ்வளவு மோகம்?


மனிதர்கள் ஏன் திருமணம் செய்கிறார்கள் என்பதற்கு இன்னும் எனக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை… நிறைய பேர், வயதாகி விட்டது எல்லாரும் முடிக்கிறார்கள், நாமும் முடிக்கலாம் என்கிற எண்ணத்துடன் தான் திருமணம் செய்கிறார்கள். அனைவருமே எப்போது கல்யாணம் என்று தான் கேட்கிறார்கள்?, ஏன் நீ திருமணம் செய்கிறாய் என்று கேட்க மாட்டேன்கிறார்கள்? திருமணத்தை ஒரு கட்டாய கடமையாக்கி வைத்துள்ளார்கள்? எல்லாவற்றிற்குமே ஒரு இரண்டாம்
option இருக்கிறது வாழ்வில். திருமணத்திற்கு மட்டும் இல்லை. திருமணம் ஆகவில்லை என்றால் நான் மேற்சொன்ன பாதி விஷயங்களுக்கு நாம் உள்ளாக தேவை இல்லை?

ஏன் மனிதன் தன்னைத் தானே ஒரு நிர்பந்தத்திற்கு ஆளாக்குகிறான், உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் தினமும் நடந்து கொண்டே இருக்கிறது? எதற்காக? ஏன் இவ்வளவு கஷ்டப் பட வேண்டும், ஏன் தன்னைத் தானே வருத்திக் கொள்ள வேண்டும். ஏன் நாட்டுக்கு நாடு சண்டை இட்டுக் கொள்கிறார்கள், ஏன் மனித உயிர்கள் பலியாகின்றன? ஏன் பொருளாதாரத் தடை விதிக்கிறார்கள், ஏன் எல்லைக் கோட்டுக்கு மேலே போனால் சுடுகிறார்கள். சக மனிதன் தானே என்ற எண்ணம் வராதா? ஏன் பங்கு சந்தை வந்தது? ஏன் தங்கம் விலை ஏறுகிறது? ஏன் இந்த பெட்ரோல் விலை ஏறுகிறது? அத்தியாவசிய தேவையான பொருட்கள் விலை மிகவும் ஏறிவிட்டது, ஏன்?
Foreign currency exchange rate ஏன் தினமும் மாறுகிறது? அதனால் என்ன பயன் நமக்கு? ஏன் நாட்டுக்கு நாடு, பாஸ்போர்ட்,விசா வாங்க வேண்டும்? அவனும் மனிதன், நீயும் மனிதன் தானே? அணுகுண்டு என்பது மனிதனை அழிக்கும் விஷயம் என்றால், அதை ஏன் நாட்டுக்கு நாடு போட்டி போட்டுக் கொண்டு தயாரிக்கிறார்கள், வாங்குகிறார்கள்? ஏன் போர் ஆயுதங்கள் தயாரித்து அதில் பிழைக்கிறார்கள், பிழைக்க எவ்வளவோ வழி இருக்கிறதே?

வாழ்க்கை என்பது குறுகிய வட்டம் தானே? ஏன் இவற்றை எல்லாம் செய்து தான் மனித இனத்தை தானே ஒரு நிர்பந்தத்திற்கு உள்ளாகுகிறான் மனிதன்? இதையெல்லாம் விட்டுவிட்டு எங்காவது ஓடிப் போய் தனியாய் காட்டுக்குள் கொஞ்ச நாள் வாழலாம் என்று நினைக்கிறது மனது. நினைத்த இரண்டு நிமிடங்களில் மாதா மாதம் 5 ஆம் தேதி ஆனால், “சம்பளம் வந்துடுச்சாப்பா?” என்று அப்பாவியாய் கேட்கும் தாயின் முகம் ஞாபகம் வருகிறது. வாழ்க்கையில் எவ்வளவோ சாதிக்க மனம் துடித்தாலும், ஒரு கட்டுப் பாட்டுக்குள் இயங்கும் மன நிலையிலேயே வாழ வேண்டி உள்ளது…!


முன்னெல்லாம் சராசரி வயது 63 என்றார்கள், தற்போது 58 என்கிறார்கள். இந்த 58 வயது வாழ்கையில் ஏன் இவ்வளவு வரையறைகள், வரைமுறைகள், கொள்கைகள், கோட்பாடுகள், கட்டுப் பாடுகள், கண்காணிப்புகள். கொஞ்சம் உலக வாழ்க்கைக்கு அப்பால் இருந்து யோசித்து பார்த்தால் நான் சொல்வதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். புரிந்து என்ன செய்ய எப்படியும் நாளைக்கு காலையில் எழுந்து வேலைக்கு ஓட வேண்டும்.


பின் குறிப்பு:
1) இவை எல்லாவற்றையும் படித்து நான் மிகப் பெரிய குழப்பத்தில் இருக்கிறேன் என்று தயவு செய்து எண்ண வேண்டாம்.
2) நான் சந்தோசமாக இல்லை எனவும் நினைத்துவிட வேண்டாம். என் வாழ்கை மிகவும் சந்தோசமாகவும், தெளிந்த நீரோடை போலவும் போய்க்கொண்டிருக்கிறது…!
3) விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன.

 

6 responses to “என்னடா வாழ்க்கை இது?

  1. Pravin's avatar

    Pravin

    July 16, 2011 at 6:45 AM

    Whatever we doing if u think don’t have reason its all simply on that moment we feel happy and sometime we are doing in compel for being happy in another moment.. its all how the way we are taking life.. If u feel sitting simple was happy do that and dont feel it doesnt have value even writing a blog doesnt have value but we feel happy.. life is like that.. enjoy the moment thats it…

     
  2. Thiru's avatar

    Thiru

    August 10, 2011 at 11:50 AM

    ‘நான்´ –
    ‘நான்´ யார்?
    ‘நான்´ என்பது என்ன?
    ‘நான்´ என்பதை எப்படி விளக்குவது உங்களுக்கு?
    ‘நான்´ ஒரு மரணத்தில் காணாமல் போகும் சராசரி ஜின்!
    ‘நான்´ என்னும் ´நானை´ நோண்டிக் கொண்டிருக்கிறேன்.
    ‘நான்´ தேடுதலுக்கிடையில்….
    சுற்றம் சூழும் போது தேடுதலை தூக்கிப் போட்டுவிட்டு….
    சராசரி வாழ்க்கைக்கு என்னுடைய ´நான்´ என்னும் சிந்தனை ஓடிவந்துவிடுகிறது.
    ‘நான்´ யார்?
    ‘நான்´ என்பது என்ன? –
    ‘நான்´ இவைபோன்ற தேடுதலில் ஈடுபடும்
    ‘நான்´ என்னும் சிந்தனை எப்படி இருக்கும்?
    சமூகத்துடன் முரண்படும் சிந்தனை –
    ‘நான்´ என்னும் எனக்குள் இருக்கும் முரண்பாடா?
    ‘நான்’ என்னும் எனக்குள் இருக்கும் ஆணவமா?
    ‘நான்’ என்னும் எனக்குள் இருக்கும் அகங்காராமா?
    ‘நான்´ என்னும் எனக்கும் சமூகத்திற்கும் என்ன தொடர்பு?
    பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்க்கையை
    ‘நான்´ எதிர் கொள்ளும்விதம் எந்த மையத்தைப் பொறுத்தது?
    கேள்விகள் ஒராயிரக்கணக்கில் குவிந்து கொண்டிருக்கிறது.
    எல்லாவற்றிற்கும் விடை தான் என்ன?
    அந்த விடையை நோக்கி தான் ‘நான்´ செல்கிறதா?
    அல்லது வாழ்க்கை விடைக்கான அனுபவத்தை கொடுக்கிறதா?
    சூழல்களும், சிந்தனைகளும் –
    ‘நான்´ என்னும் என்னை ஞானம் அடைய வைக்கின்றனவா?
    அந்த ஞானம் என்பது என்ன?
    ‘நான்´ என்னும் தன்னை அறிதலும் ஞானத்தில் உள்ளதா?
    ஆம்! எனில் இதுவரையில் உலகில் அநேக மனிதர்கள்
    உலக வாழ்வில் தன்னிலை அறியாதவர்களாகவே வாழ்கிறார்களா?
    மரணமும், வாழ்வின் இறுதி கட்டங்களும்,
    அதனூடாக சிந்திக்கும் ஞானமும்
    மனிதனைப் பக்குவப்படுத்திவிட்டதாக சொன்னாலும்
    மீண்டும் அவன் வாழ்க்கைப் போராட்டத்தில்
    வாய்க்கும், வயிற்றுக்கும் முன்பே இந்த ஞானம் ஒடுங்கிப் போவது ஏன்?
    ஞானமென்பதெல்லாம் கடைசியில் ஏட்டுச் சுரக்காய் தானா?
    அல்லது ஞானமடைந்தவன் ‘தாமரை இலை மீது இருக்கும் நீர்’ போலே
    பட்டும் படாமலும் இருந்து விடுகிறானா?
    அது இயலாமை இல்லையா?
    தம்மைச்சுற்றி நடக்கும் வன்முறைகளை
    மனிதம் ‘ஞானத்தின் கண்’ கொண்டு பார்க்குமாயின்
    அங்கே முரண்பாடுகள் இருக்காதா?
    இப்படி பல கேள்விகளுடன்…
    நான்´ என்னுடைய ‘நானை’ – எப்படி உங்களுக்கு அறிமுகப்படுத்துவது?

     
  3. Arun Kumar's avatar

    Arun Kumar

    September 27, 2011 at 9:26 AM

    You should see this film – ‘In to the Wild’ . Sadharana manusa vazhkaiya veruthu, kaatukulla poi thaniya vazhndha orutharoda unmaiyana kadhai. Ungaloda neraiya kelviku andha padathula badhil kedaikum….

     
    • Shafeeq's avatar

      Shafeeq

      September 27, 2011 at 10:08 AM

      Yes, I already seen that film. Its a great Movie…!

       
  4. M.lukman's avatar

    M.lukman

    June 20, 2012 at 12:58 PM

    Intha Ulagam unnai vitu vilaguvathum ilai kai viduvathum ilai

     
  5. ummu jaafi's avatar

    ummu jaafi

    July 10, 2015 at 2:40 PM

    இதில் நாதிக சாயல் தெரியுது. மறுமை வாழ்வை நம்புபவனுக்கு இந்த கேள்விகள் எழக்கூடாது. மரணத்தை நினை, மரணத்திற்கு பிறகுள்ள வாழ்வை நினைத்தால் அனைத்திற்கும் பதில் கிடைக்கும். மார்க்கத்த கற்பதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே.

     

Leave a reply to M.lukman Cancel reply