RSS

என்னைப் பற்றி…

என்னடா… இவன் blog எல்லாம் வைத்து இருக்கிறானே… பெரிய சூரப் புலியா இருப்பானோ என்று நினைத்து விட வேண்டாம்…! நண்பனைப் பார்த்து கற்றுக் கொண்டேன், எப்படி blog எழுதுவது என்று. என் பெயர் ஷபீககுர் ரஹ்மான் (மங்களகரமான, தமிழில் வாசிப்பதற்கு கடினமான பெயர்). கணினியில் வாழ்வு ஆதாரம் தேடும் ஒரு சாதாரண முதுகலை பட்டதாரி…!

சாதாரணம் என்றால் மிகவும் சாதாரண சாமானியன். தினமும் அலுவலகம் செல்வதற்கு இரு சுரங்கப் பாதை தாண்டி வந்து மின்சார ரயில் ஏறி, அன்றைய தினத்தந்தி யார் வைத்து இருக்கிறார் என்று பார்த்து அவர் அருகில் அமர்ந்து, அவர் படிக்கும் பேப்பரை கொஞ்சமும் வெட்கம் இல்லாமல், அவருக்கே சலிக்கும் அளவுக்கு தலையை உள்ளே நுழைத்து செய்தி படிப்பது வழக்கம். கடைசியில் அவரே இரக்கப் பட்டு கீழே இருக்கும் பேப்பரை எடுத்துக் கொடுப்பார். அதில் ஆனந்தம் கொள்ளும் அளவுக்கு சாதாரணம்..


நேரம், தூக்கம், சிந்தித்தல், அமைதி, பெண்கள், சேமிப்பு, இலக்கு, நோக்கம் மேலும் உடற்கட்டு என்றும் எதுவுமே இல்லாத… இன்றைய இளைஞர் பட்டாளத்தில நானும் ஒருவன்.

தற்குறிப்பு


பிறந்தது 13 அக்டோபர் 1983, வியாழக் கிழமை, ராமேஸ்வரத்தில். வாழ்ந்து வருவது ராமநாதபுரத்தில். இளநிலை பட்டம் BSc IT, SHASC, கீழக்கரை, மதுரை காமராஜரர் பல்கலையில், 2004 ஆம் ஆண்டு.


முதுகலை பட்டம் MCA, MIIT, புதுக் கல்லூரி, சென்னை பல்கலையில், 2007 ஆம் ஆண்டு. வேலை பார்த்து வருவது “Temenos India Pvt Ltd, Chennai” கம்பெனியில் தொழில் நுட்ப வல்லுநனாக.


வீட்டில் தலைப் பிள்ளை, அதனால் கொஞ்சம் பொறுப்பு அதிகம், சமீபமாக திருணமானது… பிறகு என்ன? இது போதும் என நினைக்கிறேன்..!

 

4 responses to “என்னைப் பற்றி…

  1. Rizwan's avatar

    Rizwan

    August 3, 2011 at 2:37 PM

    Shafeeq bhai kalakuringa… Tamil la padikirathuku konjam interesting aa than iruku… Aana Saatharanamavan nu solli irukinga, unga saatharanam enna nu engaluke thaney theriyum… 🙂 Anyway’s nice….

     
  2. Vijay's avatar

    Vijay

    September 13, 2011 at 1:46 PM

    Thozhil nutpa vallunara ? appadi endral enna nanbare ? Vijay

     
  3. R Revathisathiya's avatar

    R Revathisathiya

    November 11, 2012 at 8:10 AM

    Shafeequr ; I am not pure tamil ; but have took interest in studying tamil via my husband ; initial i read your poems where i could able to understand ; so started as ur follower … very difficult to study tamil poems ; but my husband become great fan of u !

     
  4. Mohamed Irshath's avatar

    Mohamed Irshath

    July 24, 2018 at 12:17 PM

    super machan…………….. I’m impressed……

     

Leave a reply to Rizwan Cancel reply