RSS

பாசம்

உனக்கான தோள்கள்

உனக்கான தோள்களில் யார் யாரோ சாய்ந்து செல்கிறார்கள்,
பேருந்து பயணங்களில்…!


உனக்காக

காதலுக்காக கரைதலும்…
கண்ணீரில் நனைவதும்…
சிறந்ததே…, அது உனக்காக இருக்கும் பட்சத்தில்…!


கிச்சு கிச்சு

மெலிதான விரல்களினால் கிச்சு கிச்சு மூட்டுகிறாய்…!
மரத்துப் போன எனக்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்லை…
இருந்தும் சிணுங்குகிறேன், நீ சிரித்துக் கொண்டே மேலும் தொடருகிறாய்…!


அறிவுரை

பிரிந்தால் வாழ முடியாது என்று கலங்குகிறாய்…!
உனக்கு அறிவுரை சொல்லித் தேற்றும் விதமாய்…,
என்னையும் நான் தேற்றிக் கொள்கிறேன்..!


காதலிப்பது

காதலிப்பது என் தொழில் அல்ல, என் குணம்…!
காத்திருப்பது என் விழிகள் அல்ல, என் மனம்…!


Previous Page                                                         Back to Main
 

One response to “பாசம்

  1. Karthik's avatar

    Karthik

    June 28, 2012 at 4:00 PM

    wow nice kavithai ‘காதலிப்பது’.

     

Leave a comment