பரிவு
நிழற்ப் படம்
தூங்காத விழிகளும், துயரத்தின் கண்ணீர்க் கண்களும்…
முடிவில், உன் நிழற்ப் படத்திலேயே நிலை குத்தி நிற்கின்றன…!
சிரிக்கிறாய்
ஏதோ சொல்லிச் சிரிக்கிறாய்…! புரியாமல் என்னவென்று கேட்கிறேன்.
“உனக்கா புரியாது, நடிக்காத…” என்று சொல்லி மேலும் சிரிக்கிறாய்…
புரியாமல், உன் சிரிப்பை தடை செய்யாது, நானும் சிரிக்கிறேன்…!
வளி மண்டலம்
வளி மண்டலத்தில் மெல்ல மெல்ல கரைந்து போகிறேன்…
விழி ஓரத்தில் இருந்து அடித்துச் சென்ற கண்ணீர்த் துளியின் வழியாக…!
வெள்ளை இரவும், கரும் பகலும்
வெள்ளை இரவை கொண்ட கண்களுக்கு புரிவதில்லை, பகல் கருப்புகள் அற்றது என்று…!
தூரம் குறையா சாலைகளுக்கும் தெரியவில்லை, என் கால்கள் ஓய்வுகள் அற்றது என்று…!
காற்றில் ஆடும் காகிதம்
காற்றில் ஆடும் காகிதத்தையும், நீரில் மிதக்கும் எறும்பையும் கேட்டுப் பார்…!
அவைகள் சொல்லும், நான் எங்கு சென்று கொண்டி இருக்கிறேன் என்று…!
முப்பொழுதும் உன் கற்பனைகள்
இப்போதும் சொல்கிறேன்,
முப்பொழுதும் உன் கற்பனைகள் என்று குறைத்துக் கூற விரும்பவில்லை…
எப்பொழுதும் உன் நினைவுகளே…!
உலகத்தின் வழி
உலகத்திற்கான எனது வழி, என் வீட்டு வாசற்படியில் இருந்து தான் துவங்குகிறது…!
உனது கண்ணீர் ஒதுங்கிய கண்களின் கடைசி நொடிப் பார்வையிலிருந்தே தான் துவங்குகிறது…!
கண்ணாமூச்சி
நீ சாய்ந்து கிடக்கும் தோள்களும் இங்கே காய்ந்து கிடக்கின்றன…
உன்னைத் தேடி அலைந்த கால்களும் இங்கே ஓய்ந்து கிடக்கின்றன…
கிடைக்காத நீயும், சலிக்காத நானும்,
மாறாத விழிகளும், ஆறாத கண்ணீரும்,
இன்னும் எத்தனை நாள் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு,
இருக்கப் போகிறோம் என்று விளங்கவில்லை…!
| Previous Page | Next Page |