பண்பு
நினைவுச்சுவடு
அலை உரசும் கரைபோல…
நினைவுச்சுவடுகளை,
அழித்து, அழித்து
விளையாடுகிறது மனசு…!
கழிந்து கொண்டிருக்கும் ஆயுள்
உன் தெருவைக் கடந்து போகும்போது…
எங்கிருந்தோ பார்த்துக் கொண்டிருக்கிறாய்…!
என்ற குறுகுறுப்பில்
கழிந்து கொண்டிருக்கிறது ஆயுள்…!
கவிதையும், கடிதமும்
என் கவிதைகளைப் போலவே,
கடிதங்களும் இருக்கிறது என்கிறாய்…!
கடிதம் முழுதும் கவிதையாக இருக்கிறதா? எனக்கேட்டால்,
“ரெண்டும் புரியவே இல்லை” எனச்சிரிக்கிறாய்.
அறிவுரை
அழுதிடக் கூடாதென்று அறிவுரை கூறுவாய்…!
அழுகையை நீயே தந்து எங்கே சென்றாய்?
பயமும்… வெட்கமும்…
உன்னுள் உள்ள பயமும் வெட்கமும் போட்ட எல்லைக் கோட்டைத் தாண்டி,
காதல் வெளியேறத் துடித்துக் கொண்டு இருக்க…,
வெட்கமில்லா என்னுள், பயம் போட்ட எல்லைக் கோட்டை என்றோ தாண்டிவிட்ட காதல்
உனக்கு கடிதத்தை நீட்டத் தூண்டிய மறு பொழுது, நான் கடிதத்தை எடுத்து நீட்டுகின்றேன்.
அழுத கடிதங்கள்
நீ அழுத கடிதங்கள்,
நினைவைக் கூறு போட…!
அருகில் உள்ள நண்பர்களுக்கு வெட்கப் பட்டு
கண்களிலேயே கரைந்துவிடும். என் கண்ணீர்…!
கண்ணீர் தலையணைக்கு…!
அமைதியைக் கக்கும்
இரவோ என் இதயத்தை
கசக்கிப்பிழிய;
சப்தமில்லாமல் சரணடையும்
என் கண்ணீர் தலையணைக்கு!
என்ன வேண்டும்
என்ன வேண்டுமென்றுக் கேட்டாலே…
முதலில் என்னை தான் சொல்வாய்…!
பின்புதான் என்ன வேண்டுமென்றுச் சொல்லுவாய்.!
| Previous Page | Next Page |