தூய்மை
எரிந்த கடிதம்..!
உடைந்த கண்ணாடிகளும், எரிந்த கடிதங்களும்,
உருகிய மெழுகுகளும், தொலைந்த காதலியும்,
ஒன்று என்பேன்…. முன் இருந்தபடிகிடைப்பதே இல்லை….!
சண்டாளி..!
தகிப்பையும்…. தவிப்பையும்… தாண்டி யோசித்தால்….
தங்கி இருப்பது… சண்டாளி உன் நினைவு மட்டுமே….!
மழைத் துளி
தரையில் மோதி… மழைத் துளி சாகும்…!
விரலினைத் தேடி… இமையோடு கண்ணீர் காயும்…!
– From a Song
கவிதைகள்
உனக்கான கவிதைகள் ஒவ்வொன்றும்…
எனக்குள் இருக்கும் உன்னால் சரி பார்க்கப் பட்ட பிறகே…
வெளி அனுப்பப் படுகின்றன….!
நாதியும்… வீதியும்…
நாதி இல்லாமல் அலைந்த பல நாட்களில்…
நறுமுகை உன்னை நினைத்து
நகைத்துக் கொண்டே இருந்து இருக்கிறேன்…!
வீதியின் பெயர் தெரியாத தெருக்களில் நடந்த
பல நாட்களில்…
விண்மீன் உன்னை பார்த்த வண்ணமே நடந்திருக்கிறேன்….!
குழந்தை பெயர்…
என் குழந்தைக்கு உன் பெயரை வைப்பதில்
விருப்பமில்லை எனக்கு…
என்றேனும் குழந்தையை அதட்ட நேரிடலாம்
பாதகி…!
உன்னில் என்னை இழந்த எனக்கு, தெரியாமல் போய் விட்டது…
கூடிய சீக்கிரம், பாதகி உன்னையும் இழப்பேன் என்று…!
| Previous Page | Next Page |
MURSHIDH.S
October 8, 2011 at 10:16 AM
தகுதி உள்ள நீங்கள் இதுவரை ஏன் வைரமுத்து வுடன் போட்டி போடவில்லை?