RSS

உயிர்மை

இறவா காலம்..!

கடந்த காலத்தை, நான் இறந்த காலம்
என கூறுவதில்லை…

ஏனெனில், நீ என்னுடன் இருந்த காலம்
என்றுமே இறவா காலம்…!


காலடித் தடம்

உனது ஒவ்வொரு காலடித் தடமும் சொல்லும்
நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்று…
ஏனெனில் நான் அவற்றின் மீது வழி மாறாமல்
நடந்து கொண்டிருப்பதால்…


காதலித்துப்பார்?

கல்யாணம் முடித்துப்பார்…
வீட்டை கட்டிப்பார் என்றவர்கள்…
ஏன் காதலித்துப்பார் என்று கூற வில்லை?


நினைத்தல் – மறத்தல்

யாரை நினைத்து உன்னை
என்னால் மறக்க முடியும்?

உன்னை மறந்து யாரை
என்னால் நினைக்க முடியும்?


சிந்திக்கிறேன்

சந்திக்கும் போது சிந்திக்கவில்லை…!
சந்திக்காத போது சிந்திக்கிறேன்…
எப்போது சந்திப்போம் என…?


ரசித்தல்

என்னை அதிகமாக ரசித்ததும் நீ தான்…
என்னை அதிகமாக ரசிக்க வைத்ததும் நீ தான்..!


துளி

உலகில் ஒரு துளி நான்
இந்த ஒரு துளிக்கு உலகம் நீ…!

வானில் சிறு விண்மீன் நான்
இந்த சிறு விண்மீனுக்கு நீலவானம் நீ…!


  Previous Page                                                         Next Page
 

Leave a comment