மெய்
கடிதம் எழுதுவதுண்டு…!
பட்டதும், பெற்றதும் உள்ளுக்குள்
வெந்ததும், நொந்ததும் என
எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்திட
எப்போதாவது கடிதம் எழுதுவதுண்டு…
உன் முகவரி எழுதுமிடம் காலியாகவே இருக்கும்…!
விடிந்தால் வெள்ளி.!
விடிந்தால் வெள்ளி, ஆனால்…
விடிய மறுக்கிறது, என் இரவு…!
இரவில் வியாபித்து இருக்கும், உன் நினைவு…
நினைவில் புதைந்து இருக்கும், உன் பரிவு…
உன் பரிவில் நின்று கொண்டிருக்கும், என் நினைவு…
நினைவால் நகர மறுக்கும், என் இரவு…
இரவால் விடிய மறுக்கும் வெள்ளி…
விடிந்தால் வெள்ளி…!
பழைய புகைப்படங்கள்…!
![]() |
பழைய புகைப்படங்களை தடவிப்பார்க்கும் அவ்விரு நொடிகளுக்குள் அடங்குகிறது… அந்த புகைப்படத்திற்கான கதை…! |
உன் முகம்.!
உன் முகத்தை வரை படமாக வரைந்து பார்த்தேன்…
வரை படத்தில் கூட நீ அழகாகத் தான் இருக்கிறாய்…
நான் ஒன்றும் ஓவியன் அல்ல..!
உன்னை வரையும் தருணம் தவிர…!
அழகி?
முன் ஏற்பட்ட காதலின் வலிகளின் மொத்த உருவமாய்
வந்து நின்றாள், என் முன்னாள் காதலி,
தன் வாழ்க்கையை இழந்து….. அழகி?
மன நிலை
இரண்டு நாட்களாக மனது சரியில்லை….
விசாரித்து பார்த்தேன்,
என்னவளுக்கு உடல் நிலை சரி இல்லையாம்.
| Previous Page | Next Page |
