RSS

கல்வி உதவி


இன்றைய கால கட்டத்தில் கல்வியின் அவசியத்தை நான் எடுத்து உரைத்து உங்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முன்னெல்லாம், உணவு, உடை மற்றும் இருப்பிடம் என்பவைகள் தாம் மனிதனின் அடிப்படை தேவைகளாக இருந்தன. ஆனால் இப்போது கல்வியும் அதனுள் சேர்ந்து விடும் முக்கியமான நிலையில் இருக்கிறது.


இன்றைய சூழ்நிலையில் பல நிறுவனங்கள் கல்வியை வியாபாரப் பொருளாகவும் மாற்ற நினைக்கின்றன, பல நடுத்தரக் குடும்பங்களில், தங்களது பிள்ளைகள் Matriculation இல் படித்தால் தான் நன்றாக படிக்க முடியும் என்கிற அபாயகரமான முடிவும் எடுக்கப் படுகின்றன. இந்த அளவுக்கு கல்வியின் முக்கியத்துவமும் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் வேளையில், ஏழைகள் என்று அழைக்கப்படும் கூட்டமும், lower middle class என்று அழைக்கப்படும் கூட்டமும் என்ன தான் செய்வார்கள். நாடு எவ்வளவு தான் முன்னேறினாலும், பணத்திற்காகவும் அடிப்படைத் தேவைகளுக்காகவும் அல்லல் படும் மக்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள் எப்போதும்.


பசித்தவனுக்கு உணவளித்தால், அவனது நன்றி அந்த ஒரு வேளையோடு போய்விடும், இல்லையென்றால் அவனுக்கு ஞாபகம் இருக்கும் வரை நன்றி இருக்கும். ஆனால் ஒரு நன்றாக படிக்கும் ஏழை மாணவனுக்கு, அவனது கல்விக்கு உதவி செய்தோமானால், அவன் படித்து ஒரு நல்ல வேலைக்கு சென்றால், எதிர்காலத்தில் அவனை மாதிரி அல்லல் படும் மாணவர்களுக்கு அவனே உதவி செய்யும் நிலையும் வரும். அவனது சந்ததியே நம்மால் நன்றாக தழைத்து வாழும். இன்னும் சொல்லப் போனால், ஒரு சாமானிய குடும்பத்தில், தந்தை ஒரு கொத்தனாரகவோ, இல்லை இரும்புப் பட்டறை வைத்து இருப்பவராகவோ இருந்தால் 90% அவரது மகனும் அதே வேலையை தான் செய்வான், அவன் படிக்காமல் இருந்தால். இதே நேரம், அவன் நன்றாகப் படித்து ஒரு உயரிய நிலைக்கு வருவானேயானால், அவனது தலைமுறையே நன்றாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.


நான் தான் என் குடும்பத்தின் முதல் பட்டதாரி, இதுவரைக்கும் எங்கள் வம்சத்திலயே, அதிகமாகப் படித்தவன் நான் ஒருவன் தான். அதனால் கல்வியின் அவசியம் எனக்கு நன்கு உணர்த்தப் பட்டிருக்கிறது. விவசாயம் பொய்த்து விட்ட நம் நாட்டில், மக்களின் வாழ்வாதாரத்தை மாற்ற கல்வியைத் தவிர வேறு ஒரு சக்தி இருப்பதாக எனக்கு ஏதும் தெரியவில்லை. Ipad வாங்கும் நிலையில் நம்மில் நிறைய பேர் இருக்கிறோம், ஆனால், Exam Pad கூட வாங்க முடியாமல் அவதிப் படும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


நன்று, இப்போது விஷயத்துக்கு வருகிறேன். ஏழை மாணவர்களின், கல்விக்கு உதவி செய்யலாம் என்று ஆரம்பித்து இருக்கிறேன். இதை என்னால் தனியாக செய்ய முடியாது என்று எனக்கும் உங்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆதலால், ஒரு அமைப்பின் மூலமாக செய்ய ஆரம்பித்து இருக்கிறேன். ஆதலால், தங்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இருந்தால், தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். அதே போல், யாராவது உதவி தேவைப்படும் நன்கு படிக்கும் ஏழை மாணவர்கள் இருந்தாலும் தொடர்பு கொள்ளுங்கள்.

பின் குறிப்பு:

1) தொகை ஏதும் நிர்ணயிக்கப் படவில்லை, உங்களால் முடிந்தது எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
2) தாங்கள் செய்யும் உதவி அல்லது தர்மத்திற்கான ரசீது உடனே கொடுக்கப் படும்.
3) சரியான நபர்கள் கண்டெடுக்கப்பட்டு, அவர்களது மதிப்பெண்கள், குடும்ப சூழ்நிலை, கல்விக்கான கட்டணத்தொகை என்று எல்லாம் அலசி ஆராய்ந்து அவர்களுக்கு மட்டும் உதவிக் கொண்டு இருக்கிறோம்.
4) தேவைப்படுமானால், யார் யார் பயன் பெற்றார்கள், அவர்களது தொடர்பு முகவரி, கல்லூரி அல்லது பள்ளி விவரம் வரைக்கும் தரப்படும்.
5) ஒரு அமைப்பின் மூலமாக செய்கிறேன் என்று கூறினேன், ஆனால் நான் எந்த பொறுப்பிலும் இல்லை.
6) தாங்களுக்கு உண்மையிலேயே உதவி செய்யும் எண்ணம் இருந்தால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
7) உதவி செய்யும் எண்ணமில்லாமல், விவரங்கள் மட்டும் அறிந்து கொள்ளும் நோக்கம் இருந்தால், தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம்.

 

Leave a comment