சிறு கதைகள்
செல்லும் பாதை
நான் எங்கே செல்கிறேன் என்று என்னால் கூற முடியவில்லை…!
ஆனால் எவ்வாறு செல்கிறேன் என்று நிச்சயமாய் கூற முடியும்…!
Being slapped
Being slapped is much better than, being ignored.
நிமிர்ந்த நன்னடை
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருந்தால் மட்டும் போதாது…
கொஞ்சம் அரசியலும் தெரிஞ்சு இருக்கணும் தம்பி…!
மரணம்…!
இவ்வளவு தானா வாழ்க்கை என தோன்றுகிறது….!
நடக்கும் மரணங்களை பார்க்கும் தருணங்களில்….!
Outlook இல் Mari Contact ஐ பார்த்து மனம் கலங்குவதை
தவிர ஒன்றும் செய்ய இயலவில்லை…!
தேர்தல்…!
தேர்தல் – வேட்பாளர்களின் வாதத் திறமையால்,
வாக்காளர்களை வாதம் வந்தவர்கள் போல் ஆக்கும் முயற்சி
திருடியவன்
50 ரூ திருடியவனுக்கு 6 மாதம் சிறை தண்டனை என்றால்…
176 ஆயிரம் கோடி அடித்தவர்களுக்கு எத்தனை மாதம்?
சேர்த்து வை
அவமானங்களையும், அவமதிப்புகளையும் சேர்த்து வை…
நாளை வெற்றியின் போது சொல்லிக் கொள்ள உதவும்…!
விலை உயர்வு
தங்கம், தக்காளி…
சிலிண்டர், சீயக்காய் தூள்…
பெட்ரோல், பெருங்காயம்…
என எது விலையுயர்ந்தாலும் சகிப்புத் தன்மை ததும்ப
வாழப் பழகிக் கொண்டிருக்கும் நாம் இருக்கும் வரை…
நம் அரசாங்கம் நம்மை விட நன்றாக இருக்கும்
விலைப் பட்டியல்
உணவகங்களில் புதிய விலைப் பட்டியல்
காகிதத்தில் எழுதி ஒட்டப் பட்டிருந்தது…,
ஆம்… மாதா மாதம் பெயிண்ட் செலவு போதவில்லையாம்….!
எங்கே போகிறது விலை உயர்வு?
Old Photo
|
Trying to become like the person in the Photo… But I am unable to win the TIME. Taken in the year 2005 for college ID Proof |
என்னாலும் முடியும்
நானும் TV சேனல் தொடங்குவேன்…
நானும் படம் எடுப்பேன்…
நானும் MP ஆவேன்…
முதல்வரின் பேரனாக இருந்திருந்தால்…!
